மூன்று ஆண்டுகள் – அந்தோன் சேகவ் (Three Years In Tamil by Anton Chekhov)

“உங்களை நன்றாகப் பாருங்கள். எவ்வளவு மோசமாக வாழ்கிறீர் கள் என்பதை கவனியுங்கள்’ என்று மக்களிடம் திறந்த மனதோடு கூற விரும்பினேன். அவர்களை இதைப் புரிந்து கொள்ளச் செய்வது தான் மிக முக்கியம். அவர்கள் புரிந்து கொண்டு விட்டார்களானால் தங்கள் வாழ்க்கையை இன்னும் சிறப்புடையதாக மாற்றுவார்கள் என்பது உறுதி.”

அந்தோன் சேகவ் (1860-1904) என்ற மாபெரும் ருஷ்ய எழுத்தாளர் இந்த வார்த்தைகளைக் கூறினார். லேவ் தல்ஸ்தோய், ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி ஆகியோரோடு அந்தோன் சேகவ் ஒருங்கு வைக்கப் படுவது முற்றிலும் நியாயமானதே. எதேச் சாதிகாரத்தை – அதன் எல்லா வெளிப்பாடுகளிலும் – சட்டத்துக்குக் கீழ்ப்படியாமை, பொய்மை, பலமிக்கவர்களின் ‘அலட்சியம்’, பலவீனமானவர்களின் ‘இழிந்தநிலை’ ஆகியவற்றை வெறுத்த சேகவ் மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் மனிதனுடைய கெளரவத்தையும் தார்மிகத் தூய்மையையும் போற்றினார். சுமார் ஒரு நூற்றாண்டுக் கால இடைவெளி நம்மையும் சேகவையும் பிரித்து வைத்தாலும் அவருடைய புத்தகங்களை நாம் விரும்பிப் படிக்கிறோம். நம் காலத் தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் அவற்றை எழுதியிருப்பதைப் போல நினைத்துக் கொண்டு படிக்கிறோம். ஏனென்றால் ஒரு உண் மையான எழுத்துக் கலைஞரின் அன்புக்கும் நேர்மைக்கும் திறமைக் கும் கால எல்லைகள் கிடையாது. > Damitr: இந்தக் கதை பூரணத்துவம் அடையாத காதலை வருணிக்கிறது. 1895ம் ஆண்டில் மாபெரும் ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் (1860-1904) இந்தக் கதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்புக்களில் ஒன்றாகும்.

டாக்டரின் மகளான யூலியாவுக்கும் அலெக்ஸேய் லாப்தேவ் என்ற “கோடீசுவர” வணிகருக்கும் திரு மணம் நடைபெறுகிறது. அது காதல் திருமணம் அல்ல. “பாழான பணத்துக்காக” நடந்த திருமண மும் அல்ல. லாப்தேவ் தன் இளம் மனைவியுடன் மாஸ்கோவுக்குப் போய் மூன்று வருடங்கள் தான் முடிந்திருக்கின்றன. ஆனால் இந்தக் குறுகிய காலத்துக் குள் லாப்தேவின் மனதில், தன் மனைவியோடும் தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களோடும் அவருடைய உறவுகளில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன…

ஆசிரியர் இந்தக் கதைக்குக் ‘குடும்ப வாழ்க்கைக் காட்சிகள்” என்று துணைத் தலைப்புக் கொடுக்க விரும்பினார். ஆனால் ”மூன்று ஆண்டுகள்” என்ற இந்தக் கதை இன்னும் விரிவான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. வலிமையான, இனிமையான மக்களைப் பற்றி, ஆனந்தமான, சுதந்திரமான கா தலைப் பற்றி அந்தோன் சேகவின் அழியாக் கற்பனை இக்கதையில் பிரதிபலிக்கப்படுகிறது.

மொழிபெயர்ப்பாளர்: அ. கிருஷ்ணமூர்த்தி

ஓவியர்: யூ.ம. ஸ்கவரோத்னிக்கவ்

You can get the book here and here

Follow us on

Twitter https://x.com/MirTitles

Mastadon https://mastodon.social/@mirtitles

Bluesky https://bsky.app/profile/mirtitles.bsky.social

Tumblr https://www.tumblr.com/mirtitles

Internet Archive https://archive.org/details/mir-titles

Fork us on gitlab https://gitlab.com/mirtitles

 

Unknown's avatar

About The Mitr

I am The Mitr, The Friend
This entry was posted in books and tagged , , , , . Bookmark the permalink.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.