கிர்கீஸியாவின் மக்கள் எழுத்தாளரும் சோவியத் யூனியனுடைய அரசுப் பரிசும் லெனின் பரிசும் பெற்ற சிங்கிஸ் ஐத் மாத்தவ் எழுதிய “முதல் ஆசிரியர்'”. “குல்சாரி”, “ஜமீலா”, “சிகப்புத் துண்டு அணிந்த என் சிறிய லின்டன் மரம்”, “வெள்ளைக் கப்பல்”, “அன்னை வயல்” முதலிய நாவல்கள் வாசகர்களின் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக் கின்றன. அவை உலகத்தில் ஐம்பதுக் கும் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. பல நாவல் கள் திரைப்படங்களாகத் ரிக்கப்பட்டிருக்கின்றன. தயா
சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய “அன்னை வயல்'” என்ற குறுநாவலின் தமிழ் மொழிபெயர்ப்பைச் சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் வெளியிட்டோம். பாசிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து சோவியத் மக்கள் நடத்திய மாபெரும் தேசபக்தப் போர் இந்தக் கதைக்குப் பின்னணியாகும். ஒரு தாய் இந்தப் போரில் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் இழந்துவிட்டாள். ஆனால் நன்மையின் மீதும் மனித குலத்தின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையை அவள் இழக்கவில்லை. அந்த எளிமையான தாயின் சோகக் கதையை ஆசிரியர் உருக்கத்துடன் விவரிக்கிறார். உலகத்தில் மிகச் சிறந்தது. மிகவும் அழகானது ஒரு அன்னையின் தூய நல்லிதயமே. அத்தகைய அன்னையைப் பற்றிய அழியாச் சித்திரம் இக்குறுநாவல். இதை மீண்டும் தமிழ் வாசகர்களுக்குப் படைக்கிறோம்.
“…வாழ்க்கையின் உரைநடையைப் பொற் கவிதையாக மாற்றுகின்ற திறமை சிங்கிஸ் ஐத்மாத்தவிடம் உண்டு…”
லிதெரதுர்னயா கெஜட், மாஸ்கோ, 1976.
“சிங்கிஸ் ஐத்மாத்தவ் நம் காலத்திய வாழ்க்கையின் ஆன்மிகப் பண்பைத் தொன்மையான கீழ்த்திசை மக்களின் வீறுமிக்க துன்பக் கவிதையுடன் மிகவும் அசாதாரணமான முறையில் இணைக்கிறார். அவருடைய எழுத்துக்களில் உள்ள கவித்துவத்தின் ஊற்றுக்கண் இதுவே.”
மொழிபெயர்ப்பாளர்: பூ. [சோமசுந்தரம்
பதிப்பாசிரியர்: நா. தர்மராஜன், எம். ஏ.
ஓவியர்: அலீன் மென்நிபாய்
சிங்கிஸ் ஐத்மாத்தவ் (பிறப்பு 1928) பண தேசிய இனக் கூறுகள் இணைந்திருக்கும் சோவியத் இலக்கியத்தின் மிக முக்கிய மான, மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டு மல்ல; இன்றைய உலகத்தில் மிகவும் அதிக மாகப் படிக்கப்படுகின்ற எழுத்தாளர் களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார். சிங்கிஸ் ஐத்மாத்தவ் தன்னுடைய நூல் களில் தான் பிறந்த கிர்கீஸியாவையுட அதன் மக்களையும் ஸ்டெப்பி நிலங்களையும் அற்புதமான மலைகளைப் பற்றியும் எழுதுகிறார். அவருடைய உரை நடையில் கவித்துவமும் உண்மையான சமூகக் கடமையும் ஒளிவீசுகின்றன. ஏனென்றால் “இந்த உலகத்தில் நம்முடைய நிலை எப்படி இருந்தாலும், மனிதர்களிடம் பிறப்பும் மரணமும் இருக்கின்ற வரை உண்மை அழியாது” என்று அவர் கூறுகிறார்.
You can get the book here and here
Follow us on
Twitter https://x.com/MirTitles
Mastadon https://mastodon.social/@mirtitles
Bluesky https://bsky.app/profile/mirtitles.bsky.social
Tumblr https://www.tumblr.com/mirtitles
Internet Archive https://archive.org/details/mir-titles
Fork us on gitlab https://gitlab.com/mirtitles
