மின்சக்தி அமைப்புகளின் நிறுவனச் செயல்முறைகள் – வி. அடபெக்கோவ் (Electric Power System Installation Practice In Tamil by V. Atabekov)

எந்த ஒரு நாட்டிலும் தொழில் நுட்ப நியமங்களின் முக்கிய அளவு கோல் அதன் மின்னியல் துறையின் வளர்ச்சி, மின் உற்பத்தி நிலையங்களின் திறன், மற் றும் மின் ஆற்றலின் உற்பத்தியாகும்.

அனல் மின் ஆக்கிகள், மற்றும் புனல் மின் ஆக்கிகள் ஆகியவை ஒவ்வொன்றின் திறன் அளிப்பும் உயர் அழுத்த மின்சக்தி செல்லும் பெரும்பாதைகளின் நியம அழுத்தமும் நீளமும் தொடர்ந்து மேம்பாடு அடைகின்றன. 800 கிலோவோல்ட் நியமம் கொண்ட மின் பெரும்பாதைகள் பயன் படுத்தப்படுகின்றன. வருங்காலங் களில் விரைவில் 1000 கிலோவோல்ட், மற்றும் 1500 கிலோவோல்ட் பாதைகளை நிர்மாணித்தல் திட்டமிடப் பட்டுள்ளது.

உயர் மின் சக்தித் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல நூறு பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் இணைக்கப் பட்டுள்ளன. அவற்றின் இயக்கங் கள் மின் பகிர்மானத்தை ஒட்டி ஒருங்கிணைக்கப்படுகின் றன.

வேளாண்மை, கட்டுமானம், போக்குவரத்து போன்ற தொழில் துறைகளில் மின்சாரம் பயன் படுத்தப்படுவதற்கேற்ப, மின் பொறியியல் உயர்ந்த அளவு வளர்ந்துள்ளது.

மின் சக்தி பல கோடி எந்திரங்கள், மற்றும் கருவிகளின் இயக்கத்தைத் துவக் குகிறது; உலோகப் புறப் பரப்புகளை அரிப்பு, மற்றும் அமில எதிர்ப்புப் புச்சுக் களால் தடவுகிறது. மின்புலம் ஒன்றில் பல்வேறு பாங்களைப் பூசுகிறது. எந்திரங் கள் மற்றும் கொணர் பாதைகளின் நுண்ணிய தானியங்கிகளையும் தொழில் நுட் பச் செயல்முறைகளையும் கட்டுப்படுத்துகிறது.

தொழிலின் தொடர் வளர்ச்சி, புதிய தொழிலகங்களை நிர்மாணிப்பதையும், பழைய தொழிலகங்களை விரிவாக்கலையும் பொறுத்தது. ஒரு புதிய தொழிலகத் தையோ, வசிக்கும் வீட்டையோ, மருந்தகத்தையோ, படக்காட்சி நிலையத்தை யோ நிர்மாணிக்கவோ சீரமைக்கவோ செய்யும் பொழுது அதிக அளவு மின் கம்பி அமைப்பு, மற்றும் நிறுவன வேலைகள் தேவைப்படும்.

மிக்க நவீன தொழிலகங்களில் மின் சாதனங்களை நிறுவுதலில் கீழ்க் காணும் பெரிய சிக்கலான வேலைகள் அடங்கும்.

தொழிலசுத்தின் கம்பியமைப்பு, பங்கீட்டுப் பிரிவுகள், மற்றும் மின் மாற்றி நிலையங்களை நிறுவுதல், பல்வேறு மின் அழுத்தங்கள் கொண்ட நீளமாகக் கம்பி வடங்களையும் மேல் மட்ட மின்பாதைகளையும் நிறுவுதல்.

தொழிற்சாலையின் உலோக மூடி திறப்பான் தொகுதிகள் மற்றும் கட்டுப் பாட்டுப் பலகைகளின் கம்பி அமைப்பும் நிறுவுதலும்.

மின் தூக்கிகள், உயர்த்திகள், மேல் மட்ட பயணிப்பளுத்தூக்கிகள் போன்ற உயர்த்திச் சாதனங்களை நிறுவுதல்.

தொழிற்சாலையின் தொழிலியல், மற்றும் விளக்கியல் கம்பி அமைப்புகள்.

துணைச் சாதனங்களை நிறுவுதல்.

தானியங்கு கட்டுப்பாடு, முறைப்படுத்தல், மற்றும் கண்காணிப்புத் தொகு திகளை நிறுவுதலும் கம்பி அமைப்பும்.

தொழிலில் தேர்ச்சியும் பாட அறிவும் பெற்றுள்ள மின் பணியாளர்களாலேயே இத்தகைய நுணுக்கமான வேலைகளைச் செய்ய முடியும்.

தொழில் உற்பத்தியங்களில் மின் சாதனங்களை நிறுவுதல் மற்றும் கம்பிய மைப்புகள் பற்றிய கோட்பாடுகளையும், செயல் முறை விளக்கங்களையும் தொழி லியல் நிர்வாகம் மற்றும் திட்டமிடல் பற்றிய விவரங்களையும் இந்நூல் கொண் டுள்ளது.

மொழிபெயர்ப்பாளர்: எஸ். சுந்தர சீனிவாசன் B.E.,D.L.L.

 

You can get the book here and here

Follow us on

Twitter https://x.com/MirTitles

Mastadon https://mastodon.social/@mirtitles

Bluesky https://bsky.app/profile/mirtitles.bsky.social

Tumblr https://www.tumblr.com/mirtitles

Internet Archive https://archive.org/details/mir-titles

Fork us on gitlab https://gitlab.com/mirtitles

 

Unknown's avatar

About The Mitr

I am The Mitr, The Friend
This entry was posted in books and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.