In this booklet based mostly on Soviet and foreign periodicals
the reader will find a story of radar. It tells, in a simple and informal manner, what radar is, what it does, and how, and why is it that radar has come to playa leading role in the present-day world. The booklet uses not a single mathematical formula; where necessary, pictures come to the readerâs help.
The booklet has been written for a layman interested to know how and where radio and electronics serve man. From it, the reader will learn quite a number of facts, sometimes unexpected, about the capabilities of radar.
இன்று ரேடார் இல்லாத இடமே இல்லை, எங்கு நோக்கி னும் ஏதேனும் ஒரு வடிவில் தென்படுகிறது. தெரு, நீர்க் கரை, பாதாளச் சாலை – எதுவும் பாக்கியின்றி எங்கும் ரேடார் செயல்படுகிறது; ஏனைய எல்லாத் துறைகளையும் விஞ்சும் அளவில் இராணுவத் துறையிலும் விஞ்ஞானத் துறையிலும் பயன்படுத்தப் படுகிறது.
எல்லாத் துறைகளிலும் ஆயிரக் கணக்கில் ரேடார் செயல் படுகிறது. சில ரேடார்கள் மூக்குக் கண்ணாடியில் பொருத்தப் படும் அளவுக்குச் சின்னஞ் சிறியவை, வேறு சில பல நூறு டன் எடை பெறும்படி அவ்வளவு பெரியவை.
சோவியத் இதழ்களையும் பிற நாடுகளின் வெளியீடுகளை யும் ஆதாரமாகக் கொண்ட இந்தச் சிறு புத்தகம், ரேடாரின் கதையைச் கூறுகிறது. ரேடார் என்பது என்ன, அது ஆற்றும் செயல் என்ன, எப்படி இச்செயல்களைச் செய்கிறது, இன்றைய உலகில் இப்படி அது முதன்மை பெற என்ன காரணம் – இப் புத்தகம் எளிய முறையில் புரிந்து கொள்ளும்படி விளக்கு கிறது. கணிதச் சூத்திரம் ஒன்றுகூட இல்லாமல், கதை சொல் லும் நடையில் விளக்குகிறது. தேவையான இடங்களில் சித் திரங்கள் மூலம் விளங்க வைக்கிறது. ரேடார் பொறிகள் எப்படி எல்லாம் மனிதனுக்குப் பணி
புரிகின்றன என்பதைச் சாதாரண வாசகரும் சுவையான
எளிய முறையில் தெரிந்து கொள்ள உதவும் புத்தகம் இது.
ரேடாரின் விந்தைச் செயல்கள் பற்றிய உண்மைகளை அறிந்து
கொள்ளுங்கள்.
All credits to Guptaji.
